ரூ.12 லட்சம் வரை வருமான வரிவிலக்கு : நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோர் வரி செலுத்த தேவையில்லை என பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வருமான வரி உச்ச வரம்பு 12 லட்ச ரூபாயாக அதிகரிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமைந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பிரதமர் மோடி உள்பட ஆளும் கட்சி உறுப்பினர்கள் மேசையை தட்டி வரவேற்பு அளித்தனர்.
கடந்த 2023ஆம் ஆண்டு பட்ஜெட்டின்போது, தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு 7 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 12 லட்சம் ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கான வரிவிலக்கு உச்ச வரம்பு 50 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 1 லட்சம் ரூபாயா உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் கூடுதலாக 75,000 ரூபாய் வரை கழிவு பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.