For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

வங்கதேசத்தில் நடப்பது என்ன? : முகமது யூனுசை சந்தித்த சோரோஸின் மகன்!

08:45 PM Feb 02, 2025 IST | Murugesan M
வங்கதேசத்தில் நடப்பது என்ன    முகமது யூனுசை சந்தித்த சோரோஸின் மகன்

அதிபராக பதவி ஏற்றுக்கொண்ட சில நாட்களில் வங்கதேசத்துக்கான அமெரிக்க நிதி உதவிகளை ட்ரம்ப் முடக்கி வைத்த நிலையில், ஜார்ஜ் சோரோஸின் மகனும் (Open Society Foundations) ஓபன் சொசைட்டி ஃபவுண்டேஷன்ஸ் (OSF) தலைவருமான அலெக்ஸ் சோரோஸ், வங்க தேச இடைக்கால அரசின் தலைவரான முகமது யூனுஸை சந்தித்துள்ளார். வங்கதேச பிரச்னையின் பின்னணியில் சோரோஸ் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில் இந்த சந்திப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

வங்கதேசத்தில் கடந்தாண்டு, இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர் போராட்டம், ஒரு கட்டத்தில் அரசு எதிர்ப்பு போராட்டமாக மாறியது. வலுக்காட்டாயமாக, பிரதமர் பதவியை விட்டு வெளியேற்றப்பட்ட ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

Advertisement

இதனையடுத்து, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்றது. இதற்கு ஜார்ஜ் சோரோஸ் தான் காரணம் என்று கூறப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, கடந்த அக்டோபர் மாதம், முகமது யூனுஸை, ஜார்ஜ் சோரோஸின் மகனும் (Open Society Foundations) ஓபன் சொசைட்டி ஃபவுண்டேஷன்ஸ் (OSF) தலைவருமான அலெக்ஸ் சோரோஸ் நியூயார்க்கில் சந்தித்து பேசினார்.

அப்போது, முகமது யூனுஸ் தனது தந்தையின் நீண்டகால நண்பர் என்று குறிப்பிட்ட அலெக்ஸ் சோரோஸ், சமத்துவம் மற்றும் நேர்மை அடிப்படையில், அமைதியான எதிர்காலத்தை நோக்கி நாட்டை எடுத்து செல்வார் என்றும் பாராட்டியிருந்தார்.

Advertisement

இப்போது இரண்டாவது முறையாக, ( Open Society Foundations) ஓபன் சொசைட்டி ஃபவுண்டேஷன்ஸ் குழுவினருடன் முகமது யூனுஸை சந்தித்துள்ளார்.

வங்க தேச தலைநகர் டாக்காவில் நடந்த இந்த சந்திப்பில், பொருளாதார சீர்திருத்தங்கள், ஊடக சுதந்திரம், சொத்து மீட்பு, புதிய சைபர் பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் ரோஹிங்கியா உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் பற்றி பேசியதாக தெரிய வருகிறது.

ஜார்ஜ் சோரோஸ், ஒரு நாட்டின் பாரம்பரியத்தை அழிப்பவர். அந்நாட்டின்முக்கிய தொழில் நிறுவனங்களை சீர்குலைப்பவர். உள்நாட்டு கிளர்ச்சியைத் தூண்டிவிட்டு, ஜனநாயக ஆட்சியைக் கவிழ்ப்பவர். தனது Open Society Foundations மூலம், ஜார்ஜ் சோரோஸ் இதை தொடர்ந்து செய்து வருகிறார் என்று குற்றம்சாட்டப்படுகிறது.

கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்த்ததில், ஜார்ஜ் சோரஸின் Open Society Foundations பங்கு மிக முக்கியமானது என்று கூறப்படுகிறது.

குறிப்பாக, வங்கதேசத்தில் ஓபன் சொசைட்டியால் நிதியளிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில்தான் மாணவர் போராட்டம் தொடங்கியது.

இந்தியாவிலும், ஜார்ஜ் ஸோரோஸஸின் Open Society Foundations அமைப்பின் சந்தேகத்துக்குரிய செயல்பாடுகள் நிறைய உள்ளன.

அதானி குழுமம் மீதான நிதிக் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் ஜார்ஜ் சோரோஸின் Open Society Foundations இருந்ததாக தெரியவந்தது.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு தான் என்றும், ஆனால் பிரதமர் மோடி ஐனநாயக வாதியாக இல்லை என சொன்னவர் தான் இந்த ஜார்ஜ் சோரோஸ்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, சோரோஸிடமிருந்து நிதி பெற்ற அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

மேலும், மத்திய அரசின் மக்கள் நலக் கொள்கைகளை விமர்சிக்கும் அமைப்புகள் அனைத்துக்கும் சோரோஸ் தலைமையிலான ஓபன் சொசைட்டி பவுண்டேஷன் நிதியுதவி அளிப்பதாகவும் கூறப்படுகிறது.

அதனால் தான், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஜார்ஜ் சோரஸ் பற்றி "வயதானவர், பணக்காரர் மற்றும் ஆபத்தானவர்" என்று விமர்சனம் செய்திருந்தார்.

ஜார்ஜ் சோரஸின் இளைய மகன் தான் அலெக்ஸ் சோரோஸ் Open Society Foundations தலைவராகவும் இருக்கிறார். அலெக்ஸ் சோரோஸ், சுதந்திர காஷ்மீரைத் தீவிரமாக ஆதரிப்பவர் என்பது குறிப்பிடத் தக்கது.

அலெக்ஸ் சோரோஸ், கடந்த ஆண்டு, ஹிலாரி கிளிண்டனின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவரான 47 வயதான ஹுமா அபெடினுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

ஏற்கெனவே, ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க வெளியுறவு அமைச்சராக இருந்த காலத்தில், முகமது யூனுசுக்கு பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனாக வழங்கப்பட்டது.

அதனால் தான், முந்தைய ஜோ பைடன் அரசில், முகமது யூனுசின் மகள் மோனிகா யூனுஸுக்கு அமெரிக்க அரசின் கலை மற்றும் மனிதநேயக் குழுவில் பதவி வழங்கப்பட்டது.

ஜார்ஜ் சோரோஸ் அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியை ஆதரிக்கிறார், அவர்கள் முகமது யூனுஸை ஆதரிக்கிறார்கள்.

ஆனால், ட்ரம்பின் புதிய அமைச்சரவையில் பெரும்பாலானோர் சோரோஸ் ஏற்படுத்தியுள்ள கட்டமைப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அலெக்ஸ் சோரோஸ்- முகமது யூனுஸ் சந்திப்புக்குப் பின், வங்கதேசத்தின் உள்துறை அமைச்சர், ஷேக் ஹசீனா ஆட்சியில், இந்தியாவுடன் ஏற்பட்ட அனைத்து ஒப்பந்தங்களும் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார்.

இந்த சூழலில், இந்தியா வங்க தேச உறவில் ஒரு தீர்க்கமான கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக, புவிசார் அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

Advertisement
Tags :
Advertisement