வானகரம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை - சரிந்து விழுந்த ராட்சத பேனர்!
07:41 AM Jun 09, 2025 IST | Ramamoorthy S
சென்னையில் பலத்த காற்று வீசியபோது கட்டடத்தின் மீதிருந்த ராட்சத பேனர் சரிந்து மின்சார ஒயர்கள் மீது விழுந்ததால் அசாதாரண சூழல் நிலவியது.
சென்னை மதுரவாயலை அடுத்த வானகரம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது அங்குள்ள கட்டடத்தின் மீது வைக்கப்பட்டிருந்த ராட்சத பேனர் சரிந்து மின்சார ஒயர்கள் மீது விழுந்தது.
Advertisement
மின்சார ஒயர்களில் இருந்து தீப்பொறி பறந்ததால் அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த போக்குவரத்து போலீசார் பேனரை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
இந்நிலையில், வானகரத்தில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள ராட்சத பேனர்களை, அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
Advertisement