வார விடுமுறை - திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!
02:56 PM Jun 29, 2025 IST | Ramamoorthy S
விடுமுறை தினத்தையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.
வார விடுமுறையையொட்டி அக்னி ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலில் அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. வழக்கமான நாட்களை விட வார இறுதி நாட்களில் பக்தர்கள் அதிகமாக வருவதால் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக அனுமதிக்கப்படும் பக்தர்கள், பேகோபுரம் வழியாக வெளியே அனுப்பப்படுகின்றனர்.
Advertisement
ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்துள்ளதால் கோயிலில் கூட்டம் அளவுக்கு அதிகமாக காணப்பட்டது. இதனால் பக்தர்கள் 4 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
Advertisement
Advertisement