வாலாஜாபேட்டை அருகே நடிகர் யோகிபாபு சென்ற கார் தடுப்புச்சுவர் மீது மோதி விபத்து!
11:14 AM Feb 16, 2025 IST | Ramamoorthy S
வாலாஜாபேட்டை அருகே நிகழ்ந்த கார் விபத்தில் நடிகர் யோகிபாபு காயமின்றி உயிர் தப்பினார்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 3 மணி அளவில் நடிகர் யோகிபாபு காரில் பெங்களூரு சென்று கொண்டிருந்தார். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியை கடந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், நெடுஞ்சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.
Advertisement
இதில் எந்தவித காயமுமின்றி நடிகர் யோகிபாபு நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். பின்னர், வேறு காரை வரவழைத்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சாலையின் நடுவே சிக்கியிருந்த காரை அப்புறப்படுத்தினர்.
Advertisement
Advertisement