வாழப்பாடி அருகே அனுமதி இல்லாமல் கருணாநிதி சிலை - காவல்துறை விசாரணை!
12:43 PM Jul 05, 2025 IST | Ramamoorthy S
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை அனுமதி இல்லாமல் வைத்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொது இடங்களில் உள்ள கட்சி கொடி கம்பங்களை அகற்றுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் குறிச்சி கிராமத்தில் இருந்த திமுக கொடி கம்பத்தை அகற்றிவிட்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை இரவோடு இரவாக அனுமதி இல்லாமல் வைத்ததாக கூறப்படுகிறது.
Advertisement
தகவலறிந்து அங்கு சென்ற வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement