விஜய் ஆண்டனி படத்தில் கே.ஜி.எஃப் நடிகை!
01:31 PM May 24, 2025 IST | Murugesan M
நடிகர் விஜய் ஆண்டனியின் 'லாயர்' படத்தில் கே.ஜி.எஃப் நடிகை முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.
ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'லாயர்' திரைப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளார். இப்படத்தை அவரது விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
Advertisement
படத்தின் தலைப்பு கடந்த வாரம் வெளியிடப்பட்ட நிலையில், இந்த படத்தில் கே.ஜி.எஃப் பட நடிகை ரவீணா டாண்டன் இணைந்துள்ளார் என்பதைப் படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. படப்பிடிப்பு பணிகள் அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement