விஜய கரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு!
12:54 PM Feb 05, 2025 IST | Murugesan M
விருதுநகர் மாவட்டம், விஜயகரிசல் குளம் மூன்றாம் கட்ட அகழாய்வில் மெருகேற்றும் கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விஜய கரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3-ம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் தோண்டப்பட்ட 18 குழிகளில் இருந்து, உடைந்த நிலையிலான சூடு மண் உருவ பொம்மை, தங்க மணி, சூது பவள மணி உள்ளிட்ட 3 ஆயிரத்து 300 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
Advertisement
தற்போது மேலும் இரண்டு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அகழாய்வின்போது மெருகேற்றும் கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதனை அலங்காரப் பொருட்களை பாலிஷ் போடவும், வீட்டில் தரை தளத்தை சமப்படுத்தவும் முன்னோர்கள் பயன்படுத்தியது தெரியவந்துள்ளதாக அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement