விடைபெற்றது SKYPE சேவை!
03:38 PM May 06, 2025 IST | Murugesan M
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் ஸ்கைப் சேவை விடைபெற்றது.
இலவச வீடியோ கால் வசதியை 21 ஆண்டுகளாக வழங்கி வந்த ஸ்கைப் தளத்தை, ஸ்வீடன் மற்றும் எஸ்டோனியாவைச் சேர்ந்த மென்பொறியாளர்கள் 2003ஆம் ஆண்டு உருவாக்கினர்.
Advertisement
தொடர்ந்து வேறு நிறுவனங்களுக்குக் கைமாறிய ஸ்கைப் தளம், கடந்த 2011ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் வசம் வந்து சேர்ந்தது.
2023 கணக்கின்படி சுமார் 30 கோடிக்கும் அதிகமானோர் இந்த சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஸ்கைப் சேவை இன்றுடன் நிறைவு பெறுகிறது.
Advertisement
Advertisement