விமர்சனத்திற்கு ஆளான பாக். கிரிக்கெட் மைதானம்!
06:56 PM Mar 01, 2025 IST | Murugesan M
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள கடாபி கிரிக்கெட் மைதானத்தின் வடிகால் அமைப்பு கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், மைதானத்தின் வடிகால் அமைப்பு மோசமாக உள்ளதாகவும், தண்ணீரை வெளியேற்ற போதிய உபகரணங்கள் இல்லை என்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
Advertisement
சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இதுவரை நடைபெற்ற 10 ஆட்டங்களில் 3 ஆட்டங்கள் மழையால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement