விருதுநகர் அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை மிரட்டிய எஸ்பி - இபிஎஸ் கண்டனம்!
விருதுநகரில் பட்டாசு ஆலை வெடி விபத்து சம்பவத்திற்கு நிவாரணம் கோரி போராடியவர்களை எஸ்பி. மிரட்டியதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் கோரி போராடிய மக்களைப் பார்த்து "ஒழுங்கா" இருக்கணும், இல்லனா வேற மாதிரி ஆகிடும்" என்று விருதுநகர் எஸ்பி மிரட்டியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.
வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? மடப்புரம் அஜித்குமார் மாதிரியா? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
பட்டாசு ஆலை பாதுகாப்பை உறுதி செய்யும் நிர்வாகத் திறன் இல்லை என்றும், போராடும் மக்களின் கோரிக்கையைக் கேட்கக் கூட மனமில்லை எனவும் தமிழக அரசை குற்றஞ்சாட்டியுள்ள அவர்,
வரலாற்றுப் பாசிசம் தோற்றுவிடும் ஸ்டாலின் அரசின் கொடுங்கோன்மையிடம் என விமர்சித்துள்ளார்.
மக்களை மிரட்டுவது, வன்முறையை கட்டவிழ்த்து விடுவது, சட்டத்தை மீறி செயல்படுவதை எல்லாம் உடனடியாக கைவிட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.