விருதுநகர் அருகே கட்டிட வசதி கோரி அரசுப்பள்ளி மாணவர்கள் போராட்டம்!
08:18 AM Jul 04, 2025 IST | Ramamoorthy S
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அரசுப் பள்ளியில் போதிய கட்டிட வசதி செய்து தராததை கண்டித்து பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழக்கோட்டையூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் போதுமான கட்டடம் இல்லாததால் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து கல்வி கற்று வருகின்றனர். இந்த நிலையில், கூடுதல் கட்டடம் கட்ட நிலம் ஒதுக்கி ஒன்றரை வருடங்களுக்கு மேலாகியும் கட்டட பணிகள் தொடங்கவில்லை என கூறப்படுகிறது.
Advertisement
இதனால் அவதிக்குள்ளான மாணவர்கள் கட்டட வசதி செய்துதர வலியுறுத்தி பள்ளிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் 2 மாதத்திற்குள் மாதத்திற்குள் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தபின் போராட்டம் கைவிடப்பட்டது.
Advertisement
Advertisement