விருதுநகர் அருகே 51,000 ருத்ராட்சங்களை கொண்டு உருவாக்கப்பட்ட 11 அடி உயர சிவலிங்கம் - பக்தர்கள் வழிபாடு!
09:09 AM Jan 31, 2025 IST | Sivasubramanian P
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் 51 ஆயிரம் ருத்ராட்சங்களை கொண்டு உருவாக்கப்பட்ட 11 அடி உயர சிவலிங்கத்தை பக்தர்கள் மனமுருகி வழிபட்டனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை காமராஜர் நகரில் உள்ள முத்துமாரியம்மன் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனையொட்டி, திருவண்ணாமலையிலிருந்து 450 கிலோ எடையுள்ள 51 ஆயிரம் ருத்ராட்சங்கள் காரியாபட்டிக்கு கொண்டு வரப்பட்டது.
Advertisement
இதனைக்கொண்டு 11 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட சிவலிங்கம் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக உருவாக்கப்பட்டது. இந்நிலையில், 51 ஆயிரம் ருத்ராட்சங்களால் உருவாக்கப்பட்ட 11 அடி உயர சிவலிங்கம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
Advertisement
Advertisement