For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

விருதுநகர் : பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 தொழிலாளர்கள் பலி!

01:36 PM Jun 11, 2025 IST | Murugesan M
விருதுநகர்   பட்டாசு ஆலையில் வெடி விபத்து   3 தொழிலாளர்கள் பலி

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

வடகரை கிராமத்தில் ராஜா சந்திரசேகர் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. அங்கு ஃபேன்சி ரக  பட்டாசுகள் தயாரிக்கும் பணியின் போது பெரும் வெடிவிபத்து ஏற்பட்டது.

Advertisement

இதில் பணியில் ஈடுபட்டிருந்த கருப்பையா, பேச்சியம்மாள், சவுண்டம்மாள் ஆகிய 3 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மேற்பார்வையாளர் கனி முருகன் உள்ளிட்ட 2 பேரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement