விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை அடித்து நொறுக்கிய பெண்கள்!
04:38 PM Apr 15, 2025 IST | Murugesan M
திண்டுக்கல் அருகே சட்ட விரோதமாக விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களைப் பெண்கள் அடித்து நொறுக்கினர்.
வத்தலக்குண்டு அடுத்த கோம்பைப்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக 24 மணி நேரமும், மதுபான விற்பனை நடைபெறுவது வாடிக்கையாகி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் மது அருந்தியவர்கள் அடிக்கடி கிராமத்தில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
Advertisement
இது குறித்து பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த பெண்கள் மது விற்பனை நடைபெறும் இடத்திற்குத் திரண்டு சென்றனர்.
தொடர்ந்து சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களைப் பெண்கள் அடித்து நொறுக்கினர்.
Advertisement
Advertisement