For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

05:41 PM Jul 04, 2025 IST | Murugesan M
விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்

விழுப்புரத்தில் பட்டியல் சமூக பெண்ணை சக ஊழியர்கள் முன், தரையில் அமர்ந்து பணி செய்ய வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் அடுத்த அரசமங்கலம் கிராம நூலகராகப் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சிவசங்கரி என்பவர் பணியாற்றி வருகிறார்.

Advertisement

இவர் அருகே உள்ள சென்னாகுணம் கிராமத்தில் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் நூலகத்துக்கும் பொறுப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கட்டடத்திற்கான வாடகை தொகையைப் பெறுவதற்காக விழுப்புரம் மாவட்ட  நூலகத்திற்கு சிவசங்கரி வந்துள்ளார்.

Advertisement

தொடர்ந்து கண்காணிப்பாளர் வெங்கடேசன், வாடகை தொகை வழங்குவதற்கான கடிதத்தை எழுதித் தரும்படி , சிவசங்கரியை சக ஊழியர்களின் முன், தரையில் அமர்த்தியதாகக் கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த சிவசங்கரியின் கணவர் விஸ்வநாதன், தனது மனைவி தரையில் அமர்ந்து கடிதம் எழுதுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தொடர்ந்து அவர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது இதுகுறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Tags :
Advertisement