விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்க மீண்டும் தமிழகம் செல்ல தயார் : மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான்
01:39 PM Mar 11, 2025 IST | Murugesan M
பிரதமரின் கிஷான் திட்டத்தில் விவசாயிகள் விண்ணப்பித்த உடனே பணம் கிடைத்துவிடுவதாக மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் 2-வது அமர்வு நடைபெற்று வரும் நிலையில் பிரதமரின் கிஷான் திட்டத்தில் விவசாயிகளை இணைப்பதில் சிக்கல் உள்ளதாக ஆரணி தொகுதி எம்.பி. தரணிவேந்தன் தெரிவித்தார்.
Advertisement
இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், பிரதமர் கிசான் திட்டத்தில் விண்ணப்பிக்கும் தமிழக விவசாயிகளுக்கு பட்டனை அழுத்திய உடனே பணம் கிடைப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அலுவல் பணி காரணமாக தமிழகம் சென்ற தன்னை வேளாண் துறை அமைச்சரோ, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரோ சந்திக்க வரவில்லை என கூறினார். மேலும், விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்க மீண்டும் தமிழகம் வர தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement