For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

விவசாய நிலத்தில் விழுந்த 7 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு : போலீசார் விசாரணை!

03:30 PM Jun 09, 2025 IST | Murugesan M
விவசாய நிலத்தில் விழுந்த 7 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு   போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சி மாவட்டம், பகண்டை அருகே விவசாய நிலத்தில் டிராக்டருடன் தவறி விழுந்து உயிரிழந்த 7 வயது சிறுவனின் உடலை மீட்கும் பணி 2வது நாளாக நடைபெற்று வருகிறது.

சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் டிராக்டரை கொண்டு பழுதான மின்மோட்டாரை சரிசெய்யும் பணியில் ஈடுபட்ட இளைஞர் மற்றும் 2 சிறுவர்கள் எதிர்பாராத விதமாகக் கிணற்றில் தவறி விழுந்தனர்.

Advertisement

இதில், இளைஞரும், 14 வயது சிறுவனும் நீச்சல் தெரிந்ததால் உயிர் தப்பினர். ஆனால், டிராக்டரின் அடியில் சிக்கி 7 வயது சிறுவன் உயிரிழந்தார். அவரது  உடலை மீட்கும் பணியில் 2வது நாளாகப் பொதுமக்களும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக 10க்கும் மேற்பட்ட மின் மோட்டார்களை கொண்டு கிணற்றில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement