For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

விவேகானந்தருக்கு ஆன்மீக வழிகாட்டியாக திகழ்ந்து ஞானம் வழங்கியவர் பகவான் ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் - அண்ணாமலை புகழாரம்!

12:01 PM Feb 18, 2025 IST | Ramamoorthy S
விவேகானந்தருக்கு ஆன்மீக வழிகாட்டியாக திகழ்ந்து ஞானம் வழங்கியவர் பகவான் ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்   அண்ணாமலை புகழாரம்

வீரத் துறவி விவேகானந்தருக்கு ஆன்மீக வழிகாட்டியாக திகழ்ந்து ஞானம் வழங்கியவர் பகவான் ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பாரதத்தின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவரான, பகவான் ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவதரித்த தினம் இன்று என தெரிவித்துள்ளார்.

Advertisement

உலக நன்மைக்காகவும், ஆன்ம விடுதலைக்காகவும் துறவறம் பூண்டவர். இறைவன் ஒருவனே. அவனை அடைவதற்கான பல வழிகளே, வழிபாட்டு முறைகள் என்பதை, மக்களுக்குத் தெளிவுபடுத்தியவர்  என்றும் அவர் கூறியுள்ளார்.

வீரத் துறவி விவேகானந்தருக்கு, ஆன்மீக வழிகாட்டியாகத் திகழ்ந்து ஞானம் வழங்கியவர் என்றும்,  அனைத்து மதங்களும் இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதை உணர்ந்து, ஒற்றுமையை வலியுறுத்திய பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரைப் போற்றி வணங்குவோம் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement