வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட MS-03 தகவல் தொடர்பு செயற்கைக்கோள் - பிரதமர் மோடி வாழ்த்து!
07:01 AM Nov 03, 2025 IST | Ramamoorthy S
இந்தியாவின் மிக கனமான CMS-03 தகவல் தொடர்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியதற்காக இஸ்ரோவிற்கு பிரதமர் மோடி பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இஸ்ரோ தொடர்ந்து நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாகவும், இஸ்ரோ விஞ்ஞானிகளின் ஆற்றலால், இந்தியாவின் விண்வெளித்துறை புதிய கண்டுபிடிப்புகளுக்கும், வெற்றிக்கும் பெயர் பெற்றதாக மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும், இஸ்ரோவின் தொடர்ச்சியான வெற்றிகள் தேசத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பதாக நெகிழ்ந்த பிரதமர் மோடி, எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி அதிகாரம் அளித்துள்ளதாகவும் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
Advertisement
Advertisement