For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

வெளிநாட்டவரை காலவரம்பின்றி தடுத்து வைக்க முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்!

04:35 PM Jun 10, 2025 IST | Murugesan M
வெளிநாட்டவரை காலவரம்பின்றி தடுத்து வைக்க முடியாது   சென்னை உயர்நீதிமன்றம்

வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராகச் சேர்க்கப்படாத வெளிநாட்டவரை காலவரம்பின்றி தடுத்து வைக்க முடியாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வங்கியில் 500 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் தொழிலதிபர் சிவசங்கரனுக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

Advertisement

அதன் ஒரு பகுதியாக, தனக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்யக் கோரி செஷல்ஸ் நாட்டு குடிமகனான கார்த்திக் பார்த்திபன் என்பவர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம், கார்த்திக் பார்த்திபனுக்கு எதிரான  வழக்கில் ஓராண்டில் புலன் விசாரணையை முடிக்க வேண்டும் என சிபிஐக்கு உத்தரவிட்டது. விசாரணை முடிவில் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை எனத் தெரியவந்தால் மனுதாரருக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

Advertisement

மேலும், மலேசியாவில் நடக்கும் சகோதரர் திருமணத்தில் கலந்து கொள்ள கார்த்திக் பார்த்திபனுக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியளிக்கப்பட்டது.

Advertisement
Tags :
Advertisement