வெஸ்ட் இண்டீஸ் பவுலருக்கு அபராதம் விதித்த ஐசிசி!
02:23 PM Jun 28, 2025 IST | Murugesan M
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்சுக்கு எதிராகச் சைகை செய்த, வெஸ்ட் இண்டீஸ் பவுலர் ஜெய்டன் சீல்ஸுக்கு ஐசிசி அபராதம் விதித்தது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
Advertisement
இதில் ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்சின்போது கேப்டன் கம்மின்சின் விக்கெட்டை வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்டன் சீல்ஸ் வீழ்த்தினார்.
விக்கெட் வீழ்த்தியவுடன் கம்மின்சை நோக்கி டிரெஸ்சிங் ரூம் அங்கிருக்கிறது என்ற வகையில் அவர் சைகைச் செய்தார்.
Advertisement
இதுகுறித்து விசாரித்த ஐசிசி, ஜெய்டன் சீல்சுக்குப் போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதித்ததுடன், ஒரு தகுதி இழப்பு புள்ளியையும் தண்டனையாக அறிவித்தது.
Advertisement