வேலுடன் காட்சியளிக்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ராஜகோபுரம்!
12:05 PM Mar 23, 2025 IST | Ramamoorthy S
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் ராஜகோபுரம் வெள்ளை நிறம் பூசப்பட்டு, வேலுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கடந்த நிலையில் வரும் ஜுலை 7ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
Advertisement
இதற்காக கடந்த 2023ம் ஆண்டு ராஜகோபுரத்திற்கு பாலாலயம் நடைபெற்றது. இதனைதொடர்ந்து 137 அடி உயரமும், 9 நிலைகளையும் கொண்ட ராஜகோபுரத்தில் திருப்பணிகள் நடைபெற்றது. தற்போது ராஜகோபுரம் வெள்ளை நிறம் பூசப்பட்டு, வேலுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
Advertisement
Advertisement