For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

வேலூர் - தீர்த்தகிரி வடிவேலு சுப்பிரமணியர் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலம்!

01:40 PM Jun 08, 2025 IST | Ramamoorthy S
வேலூர்   தீர்த்தகிரி வடிவேலு சுப்பிரமணியர் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலம்

வேலூரில் உள்ள தீர்த்தகிரி மலையில் உலகின் 3வது பெரிய முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ள வடிவேலு சுப்பிரமணியர் கோயில் குடமுழுக்கு விழா, விமரிசையாக நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் புதுவசூர் தீர்த்தகிரி மலை மீது அமைந்துள்ள இக்கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்துவது வழக்கம்.

Advertisement

இந்த மலை மீது முருகப்பெருமானுக்கு 92 அடியில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. மலேசியா மற்றும் சேலம் முத்துமலை முருகன் சிலைக்கு அடுத்த படியாக உலகின் 3வது பெரிய முருகன் சிலை தீர்த்தகிரி மலையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஊர் மக்கள் ஏற்பாட்டின் பேரில் பல்வேறு நதிகளில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு யாகசாலை அமைக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க குடமுழுக்கு விமரிசையாக நடைபெற்றது.

Advertisement

தொடர்ந்து டிரோன் மூலம் பிரமாண்ட முருகன் சிலை மீது புனிதநீர் ஊற்றப்பட்டு, பூக்கள் தூவப்பட்டன. அப்போது பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், அரோகா முழக்கமிட்டு பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement
Tags :
Advertisement