வேளச்சேரி அருகே போலீசாரை தாக்கிய தந்தை மகன் கைது!
03:32 PM Apr 15, 2025 IST | Murugesan M
வேளச்சேரி அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலரைத் தாக்கிய விவகாரத்தில் தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை வேளச்சேரியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவின்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Advertisement
இதனைச் சரிசெய்யும் பணியில் காவலர் காமராஜ் என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த தந்தை, மகனை ஓரமாகப் போகச் சொன்னதாகக் கூறப்படுகிறது.
இதனால், மதுபோதையிலிருந்த தந்தை, மகன் காவலர் காமராஜை தாக்கியுள்ளனர். இது தொடர்பாக வேளச்சேரி காவல் நிலையத்தில் காவலர் காமராஜ் புகார் அளித்த நிலையில், தந்தை கணேசன், மகன் பிரித்தீபன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement