ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும் - பாலச்சந்திதன் தகவல்!
ஃபெஞ்சல் புயல் இன்று மாலை மகாபலிபுரம் அருகே கரை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
சென்னை நுங்கம்பாக்கத்தில் தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஃபெஞ்சல் புயல் சில நேரங்களில் 12 கிலோ மீட்டர், சில நேரம் 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக தெரிவித்தார். புயல் கரையை கடக்கும் நிகழ்வு சில மணி நேரம் வரை கூட இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
பலத்த காற்றுக்கான எச்சரிக்கை பொறுத்தவரை இன்று புயல் கரை கடக்கும் போது திருவள்ளூர் தொடங்கி மயிலாடுதுறை வரை வட தமிழக கடற்கரை பகுதிகளில் 70 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார் .
இன்று காலை 8.30 மணி வரை நுங்கம்பாக்கத்தில் 97 மில்லி மீட்டர், மகாபலிபுரத்தில் 70 mm மழை பதிவாகி உள்ளதாகவும், பருவ மழை டிசம்பர் 31ஆம் தேதி வரை தொடரும் என்றும் அவர் கூறினார்.