ஃபெஞ்சல் புயல் - திருவள்ளூர் மாவட்ட கடலோர பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தம்!
11:32 AM Nov 30, 2024 IST | Murugesan M
ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று மதியத்திற்கு மேல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக திருவள்ளூரின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
Advertisement
பாதுகாப்பு கருதி கடலோர கிராமங்களில் மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களை புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
Advertisement
Advertisement