ஃபெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை - பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை அறிவுறுத்தல்!
10:43 AM Nov 30, 2024 IST
|
Murugesan M
ஃபெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை வெளியிட்டுள்ளது,.
Advertisement
அதன்படி, குறுகிய காலத்தில் பிரசவ தேதி எதிர்பார்க்கப்படும் தாய்மார்கள் முன்னரே, மருத்துவமனையில் தாமதமின்றி அனுமதிக்கப்பட வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.
தகுந்த மருந்து மாத்திரைகள், பாம்பு கடி விஷமுறிவு ஊசி மற்றும் ப்ளீச்சிங் பவுடர் ஆகியவற்றை இருப்பு வைக்க உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் சுகாதார நிலையங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு அவசர மருத்துவ சேவைகளுக்காக 108-ஐ தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Next Article