செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அகற்றப்பட்ட பாரத மாதா சிலை - உரியவர்களிடம் ஒப்படைக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு!

12:58 PM Nov 13, 2024 IST | Murugesan M

விருதுநகர் மாவட்டம் சூறைக்குண்டு அருகே பாஜக அலுவலகத்தில் இருந்து அகற்றப்பட்ட பாரத மாதா சிலையை உரியவர்களிடம் ஒப்படைக்க, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Advertisement

விருதுநகர் மாவட்டம் கோட்டைபட்டி கிராமத்தில் உள்ள பாஜக மாவட்ட அலுவலக வளாகத்தில் பாரத மாதா சிலை வைக்கப்பட்டிருந்தது.

இந்த பாரத மாதா சிலை, அரசின் அனுமதியின்றி வைக்கப்பட்டதாக கூறி, அதனை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Advertisement

இதனையடுத்து தனியார் நிலத்தில் பாரத மாதா சிலை வைக்க அனுமதிக்க கோரி, பாஜக விருதுநகர் கிழக்கு மாவட்டத் தலைவர் ஜி.பாண்டுரங்கன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, பறிமுதல் செய்யப்பட்ட பாரத மாதா சிலையை மீண்டும் பாஜக நிர்வாகிகளிடம் ஒப்படைக்க வருவாய்த்துறைக்கு உத்தரவிட்டார்.

Advertisement
Tags :
idol of Bharat MataMadurai high courtMAINSuraikundu bjp officeVirudhunagar
Advertisement
Next Article