செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அச்சுறுத்தும் 8 புதிய வைரஸ்கள் - சீனா விஞ்ஞானிகள்

01:57 PM Oct 30, 2023 IST | Abinaya Ganesan

கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரசின்
தாக்கம் இன்னும் முடிவடையவில்லை . உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய கொரோனாவால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டன, ஏராளமானோர் உயிரிழந்தனர்.

Advertisement

2-வது அலை, 3-வது அலை என அடுத்தடுத்து வந்த நிலையில் கொரோனா படிப்படியாக
கட்டுக்குள் வந்தது. எனினும் அதன் தாக்கத்தில் இருந்து இன்னும் மக்கள்
மீளவில்லை.

இந்த நிலையில் மற்றொரு அதிர்ச்சி தகவலை சீன விஞ்ஞானிகள்
வெளியிட்டுள்ளனர். அதில் தெற்கு சீனாவில் அமைந்துள்ள வெப்பமண்டல தீவான ஹைனானில் இதுவரை கண்டிராத 8 வைரஸ்களை சீனாவின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

Advertisement

இந்த ஆய்வை சீன மருத்துவ அறிவியல் அகாடமி மற்றும் பீக்கிங் யூனியன்
மருத்துவக் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்.
இந்த வைரஸ் இனங்கள் பெருகினால் மனிதர்களைத் தாக்கும் அபாயம் உள்ளது
என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு
காரணமான சார்ஸ் -கோவி-2 உடன் தொடர்புடைய வைரசும் இதில் அடங்கும்.

341 வகை யான பூச்சிகளில் இருந்து எடுக்கப்பட்ட 682 மாதிரிகளில் இந்த
வைரஸ்களை அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

இதுகுறித்துத் விஞ்ஞானி ஒருவர் கூறும்போது "ஹைனானில் வசிக்கும் கொறித்துண்ணி பூச்சிகளிடமிருந்து 700-க்கும் மேற்பட்ட மாதிரிகளை நாங்கள் ஆய்வு செய்தோம், மேலும் 8 வைரஸ்களைக் கண்டறிந்தோம்.
வைரஸ்களில் ஒன்று, கொரோனா வைரஸின் அதே குடும்பத்தை சேர்ந்தது.
இந்த வைரஸ்கள் கொறித்துண்ணி பூச்சிகளில் காணப்பட்டன, இந்த வைரஸ் பரவத்தொடங்கினால்
மனிதர்களை அதிகமாக பாதிக்கும் வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார்.

மேலும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்களில், ஒன்று கோவிஎச்.எம்.யு-1
எனப்படும் புதிய கொரோனா வைரஸ் என அடையாளம் காணப்பட்டது. இது
கொரோனாவுக்கு காரணமான அதே குழுவைச் சேர்ந்தது.

விஞ்ஞானிகள் கண்டுபிடித்த வைரஸ்களில் மஞ்சள் காய்ச்சல் மற்றும் டெங்கு போன்ற வைரஸ்களுடன் தொடர்புடைய இரண்டு புதிய பூச்சி வைரஸ்கள், ஒரு புதிய ஆஸ்ட்ரோ வைரஸ், இது வயிற்றுப் பூச்சிகள் போன்ற தொற்றுநோய்களை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது.

2 புதிய பார்வோ வைரஸ்கள், இது காய்ச்சலைப் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். 2 புதிய பாப்பிலோமா வைரஸ்கள், அவை பிறப்புறுப்பு மருக்கள் மற்றும் மனிதர்களில் சில புற்றுநோய்கள் போன்ற நிலைமைகளுடன் தொடர்புடையவைரஸ்கள்.
ராட்சத எலி மற்றும் சிக்கிம் எலி ஆகிய 2 எலி இனங்களில் புதிய பூச்சிச்
வைரஸ்கள் மற்றும் பார்வோ வைரஸ்கள் இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

Advertisement
Tags :
chinacovid-19MAINnewvariantnewvirus
Advertisement
Next Article