செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

விடாமுயற்சி ரிலீஸ் - DJ இசையுடன் திரையரங்கு முன் ஆட்டம் போட்ட அஜித் ரசிகர்கள்!

06:33 AM Feb 06, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியது.

Advertisement

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "விடாமுயற்சி." இந்தப் படத்தில் ஆரவ், அர்ஜுன், திரிஷா, உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

அனிருத் இசையில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழை தணிக்கைக்குழு வழங்கி உள்ளது.

Advertisement

இந்நிலையில், ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விடாமுயற்சி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. படத்தின் சிறப்பு காட்சி காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை 5 காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்து. இதனிடையே  விடாமுயற்சி திரைப்படத்தின் தனியே என்ற 3-வது பாடல் வெளியானது.

படம் இன்று வெளியாவதை முன்னிட்டு திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் அலங்கார் திரையரங்கு முன்பு அஜித் ரசிகர்கள் உற்சாக கொண்டாடாட்டத்தில் ஈடுபட்டனர்.  DJ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த "வேலூர் தல கோட்டை ரசிகர்கள், ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணத்தில் உள்ள வாசு திரையரங்கில் வைக்கப்பட்டுள்ள ஆள் உயர அஜித் கட்டவுட் மற்றும் போஸ்டருக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்தனர். மேலும், DJ மியூசிக்குடன் அஜித்தின் பாடல்களை போட்டு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement
Tags :
FEATUREDMAINVidaaMuyarchividaamuyarchi bgmvidaamuyarchi songvidaamuyarchi songsvidaamuyarchi updateVidamuyarchividamuyarchi ajithvidamuyarchi songvidamuyarchi teaservidamuyarchi update
Advertisement