செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அடம்பிடிக்கும் தமிழக அரசு : விஸ்வகர்மா திட்டத்தின் பயன்கள் என்ன? - சிறப்பு தொகுப்பு!

07:00 PM Nov 29, 2024 IST | Murugesan M

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது என முதலமைச்சர் அறிவித்திருப்பது கைவினை கலைஞர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விஸ்வகர்மா திட்டம் குறித்தும், அதனால் கிடைக்கும் பலன்கள் குறித்தும் சற்று விரிவாக பார்க்கலாம்.

Advertisement

நாடு முழுவதும் உள்ள கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் கடந்த 2023 ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது தான் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்.

உடல் உழைப்பையும், பாரம்பரிய கருவிகளையும் பயன்படுத்தி வேலை செய்யும் கைவினை கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆதரவளிப்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

Advertisement

கைவினை கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் வேலையின் தரத்தை மேலும் ஊக்குவிப்பதற்காக இத்திட்டத்தின் கீழ் 13 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கைவினை கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு உத்தரவாதம் இல்லாத கடன் வழங்குதல், திறனுக்கான பயிற்சி, டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான ஊக்கத் தொகை, சந்தை தொடர்பான நவீன கருவிகளையும் பெற இந்த திட்டம் வழிவகுக்கிறது.

காலணி செய்பவர், குயவர், சிற்பிகள், முடி திருத்தும் தொழிலாளர்கள், கொத்தனார், சலவைத் தொழிலாளர்கள் என 18 வகையான தொழில்களில் ஈடுபடுவோர் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையவர்களாக உள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ் தகுதிபெறுவோருக்கு 5 முதல் 7 நாட்களுக்கு அடிப்படைத் திறன் பயிற்சி மற்றும் அதன் தொடர்ச்சியாக மேம்பாட்டுத் திறன் பயிற்சி பயிற்சியும் வழங்கப்பட உள்ளன.

பயிற்சி பெறும் நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் ஊக்கத் தொகையாகவும், பயிற்சியை நிறைவு செய்தபின் எந்தவித உத்தரவாதமுமின்றி மூன்று லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

பயிற்சியை நிறைவு செய்யும் கைவினை கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு பிரதமரின் விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கப்படுவதோடு அவர்களுக்கான அங்கீகாரமும் வழங்கப்படும்.

மேலும் ஒரு மாதத்திற்கு 100 டிஜிட்டல் பரிவர்த்தனைகள் என்ற வீதத்தில் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தலா ஒரு ரூபாய் ஊக்கத்தொகையாகவும் கைவினை கலைஞர்களுக்கு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கைவினை கலைஞர்கள் தயாரிக்கும் கைவினைப் பொருட்கள் எளிதாக சந்தையை அடைவதற்கும், அதனை பொதுமக்களிடையே பிரபலமாக்கி விளம்பரப்படுத்தவும் மத்திய அரசே உதவி செய்கிறது. பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் பயன்பெற இதுவரை நாடு முழுவதிலுமிருந்து இரண்டு கோடியே 60 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Advertisement
Tags :
FEATUREDMAINPM Moditamil nadu governmentVishwakarma schemechief minister mk stalinartisans
Advertisement
Next Article