அடிப்படை வசதிகள் இன்றி காணப்படும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் - பயணிகள் குற்றச்சாட்டு!
08:30 PM Dec 08, 2024 IST
|
Murugesan M
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கழிவறைகள் சுகாதாரமற்று இருப்பதாகவும், அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
Advertisement
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பேருந்து நிலையத்தை நாள்தோறும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அங்குள்ள கழிவறைகள் சுகாதாரமற்று இருப்பதாலும், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டும் பொதுமக்கள், மத்திய பேருந்து நிலையத்தை மேம்படுத்த மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
Advertisement
Advertisement
Next Article