செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும்! - வானிலை ஆய்வு மையம்

12:13 PM Nov 27, 2024 IST | Murugesan M

வங்கக் கடலில் உருவாகவுள்ள ஃபெங்கல் புயல் கரையை கடக்கும் முன்பே வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

தென்​மேற்கு வங்கக் கடல் பகுதி​யில் நேற்று முன்​தினம் நிலை கொண்​டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்​பெற்றது.

இந்நிலையில், சென்னையில் இருந்து 550 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்றிரவு புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

புயலுக்கு "ஃபெங்கல்" என்று பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், இந்த புயலானது நாளை மறுதினம் வங்கக்கடலில் புயலாகவே நீடிக்கும் எனவும், 30-ஆம் தேதி சென்னைக்கு 30 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொள்ளும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஃபெங்கல் புயல் கரையை கடக்கும் முன்பே வலுவிழக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Tags :
chennai rain news todaychennai rainsFEATUREDMAINTurning into a storm in the next 12 hours! - Meteorological Centre
Advertisement
Next Article