அணைப்பாளையம் ஏரியில் குவிந்த பறவைகள்!
12:49 PM Jan 31, 2025 IST
|
Murugesan M
ராசிபுரம் அடுத்துள்ள அணைப்பாளையம் ஏரியில் ஆயிரக்கணக்கான பறவைகள் குவிந்துள்ளன. இந்த காட்சி பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன.
Advertisement
நாமக்கல் மாவட்டம், அணைப்பாளையம் தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகில் அணைப்பாளையம் ஏரி அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக பெய்த கன மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் கிடுகிடுவென நிரம்பின.
இதனால் ஏரிகளில் மீன்கள் வழக்கத்தைவிட அதிக அளவில் காணப்படுவதால், முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு வெளிநாட்டு பறவைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் இறைதேடி குவிந்துள்ளன.
Advertisement
அணைப்பாளையம் ஏரியில் குவிந்துள்ள பறவைகளை அக்கம் பக்கம் பகுதியில் வசிப்பவர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கின்றனர்.
Advertisement