செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு : அமித் ஷா

07:08 PM Apr 11, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகும் அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு வழங்கப்படும் என  மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரனிடமிருந்து மட்டுமே பரிந்துரை பெறப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை பாராட்டத்தக்க சாதனைகளைச் செய்துள்ளார் என்றும் பிரதமர் மோடியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதாக இருந்தாலும் சரி, அல்லது கட்சியின் திட்டங்களை கிராமம் கிராமமாக எடுத்துச் செல்வதாக இருந்தாலும் சரி, அண்ணாமலையின் பங்களிப்பு அளப்பரியது என்று அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கட்சியின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலையின் நிறுவனத் திறன்களை பாஜக பயன்படுத்தும் என்று அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
bjp k annamalaiFEATUREDMAINNational responsibility for Annamalai: Amit Shahtn bjp
Advertisement