அண்ணாமலை அறிவிப்பு எதிரொலியாக பேருந்துகளில் காவல்துறை சோதனை!
டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து தேதி அறிவிக்காமல் போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்த நிலையில், தலைமைச் செயலகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளில் காவல்துறை தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
டாஸ்மாக் நிர்வாகத்தில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது அமலாக்கத்துறை சோதனை மூலம் தெரியவந்தது. இதை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் நேற்று போராட்டம் நடைபெற்ற நிலையில், பாஜக தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
அப்போது, தேதி அறிவிக்காமல் இனி போராட்டத்தை முன்னெடுப்போம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் போராட்டம் நடைபெற வாய்ப்புள்ளதால் தலைமைச் செயலகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளில் காவல்துறை தீவிர சோதனை மேற்கொண்டனர். பேருந்துகளை வழிமறித்து காவல்துறை சோதனை நடத்தியதால் அலுவலகம் செல்லும் மக்கள் கடும் அவதியடைந்தனர்.