செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அண்ணாமலை குறித்து ஆதவ் அர்ஜுனா கருத்து - லாட்டரி அதிபர் மார்டினின் மகன் சார்லஸ் கண்டனம்!

01:01 PM Apr 01, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து ஆதவ் அர்ஜுனா விமர்சித்து பேசியதற்கு லாட்டரி அதிபர் மார்டினின் மகன் சார்லஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மக்கள் பணியில் அயராது உழைத்து வரும் அண்ணாமலை குறித்து ஆதவ் அர்ஜுனா விமர்சித்து பேசியதற்கு மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், ஆதவ் அர்ஜுனா தனது தந்தையின் பணத்தை பயன்படுத்திக்கொண்டு, தங்கள் குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருவதாகவும்,  தனது பதவி மற்றும் பொருளாதார பேராசையை தீர்த்துக்கொள்ள பிரசாந்த் கிஷோருடன் கூட்டு சேர்ந்து, பல கட்சிகளில் சேர்ந்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

அத்துடன் ஆதவ் அர்ஜுனா செய்யும் கிறுக்குத்தனங்களுக்கும், தனக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என தெளிவுபடுத்தியுள்ள அவர்,இதுபோன்ற செயல்கள் தொடரும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாட நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.

 

Advertisement
Tags :
Adhav ArjunaBJP State President AnnamalaiCharles martinFEATUREDlottery martinMAIN
Advertisement