அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிகள் பாதுகாப்பு குழு அமைப்பு!
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் பாதுகாப்புக்காக குழு அமைத்து பல்கலைக்கழகத்தின் கன்வினர் குழு உத்தரவிட்டுள்ளது.
Advertisement
அண்ணா பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் இல்லாத காரணத்தினால் பாதுகாப்பு கருதி பல முக்கிய உத்தரவுகளை கன்வினர் குழு பிறப்பித்துள்ளது.
புதிதாக 40 காவலாளிகளை நியமித்து, பணியில் இருக்கும் காவலாளியின் எண்ணிக்கையை 180ஆக உயர்த்த முடிவு செய்துள்ள கன்வினர் குழு,மாணவிகளின் பாதுகாப்புக்காக புதிய குழு ஒன்றை அமைத்தும் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல் பல்கலைக்கழகத்தில் பழுதடைந்துள்ள சிசிடிவி கேமராக்களை உடனடியாக சரிசெய்ய உத்தரவிட்டுள்ள கன்வினர் குழு, பல்கலைக்கழகத்தில் புதிதாக 30 சிசிடிவி கேமராக்களை பொருத்தவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், விடுதியில் தங்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் விடுதி காப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.