அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு : தமிழக அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் விவரம் எவ்வாறு வெளியானது என தமிழக அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பாதிக்கப்பட்ட மாணவிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியின் விவரம் எவ்வாறு வெளியானது என தமிழக அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், FIR DOWNLOAD செய்யப்படுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்த நீதிபதிகள், வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க எந்த தடையும் இல்லை என தெரிவித்தனர்.