For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

அண்ணா பல்கலை மாணவி எஃப்ஐஆர் வெளியானது சட்ட விரோதம் - வழக்கறிஞர் விளக்கம்!

03:56 PM Dec 26, 2024 IST | Murugesan M
அண்ணா பல்கலை மாணவி எஃப்ஐஆர் வெளியானது சட்ட விரோதம்   வழக்கறிஞர் விளக்கம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவரங்கள் அடங்கிய எஃப்ஐஆர் வெளியான விவகாரத்தில் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளதாக வழக்கறிஞர் நதியா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், FIR-ஐ வெளியிட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளதாக தெரிவித்தார். FIR நகல் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருவதாக கூறிய அவர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை காவல்துறை விசாரிக்க உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் உள்ளதாக கூறியுள்ளார்.

Advertisement

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான FIR வெளியிடப்பட்டது சட்டவிரோதம் என்றும், FIR பகிரப்பட காரணமான காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளதாக தெரிவித்தார். மாணவி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும் சட்டத்தில் இடமுள்ளதாகவும் அவர் கூறினார்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement