அண்ணா பல்கலை மாணவி வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் - தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தல்!
அண்ணா பல்கலை மாணவி வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
Advertisement
சென்னை கமலாலயத்தில், தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம் நடந்தது. அதனைத் தொடர்ந்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் புகார் வழக்கில் தமிழக அரசு மீது நம்பிக்கையில்லை என்றும், வன்கொடுமை வழக்கை சிபிஐ-க்கு மாற்றுவது மட்டுமே பலன் தரும் எனவும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று குறிப்பிட்ட அவர், அதிமுக ஆட்சியை பற்றி குறை சொல்வதிலேயே, சட்டப்பேரவை நேரத்தை திமுக வீணடிக்கிறது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், பாஜக மையக்குழு கூட்டத்தில் கட்சி நிர்வாகிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்ட போது தமிழிசை முதலுதவி சிகிச்சை அளித்தார்.