செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அண்ணா பல்கலை மாணவி வழக்கு - ஞானசேகரன் கார் பறிமுதல்!

10:51 AM Feb 23, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் கைதான ஞானசேகரனின் காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisement

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது புழல் சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

கடந்த 2022 முதல் 2024ம் ஆண்டு வரை 7 வீடுகளில் கொள்ளை அடித்த ஞானசேகரன், அந்தப் பணத்தில் சொகுசு கார் வாங்கியதும், பிரியாணி கடை நடத்தி வந்ததும் அம்பலமானது.

Advertisement

இதையடுத்து 7 திருட்டு வழக்குகளில் ஞானசேகரனை போலீசார் கைது செய்து 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே கொள்ளையடித்த பணத்தில் வாங்கிய மகேந்திரா தார் கார் பறிமுதல் செய்யப்பட்டு பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

Advertisement
Tags :
Anna UniversityAnna University campuschennai policeDMKgnanasakeran car recoveredGnanasekaran arrestMAINstudent sexual assaulttamilnadu government
Advertisement