அண்ணா பல்கலை மாணவி விவகாரம் - ஆளுநரிடம் தமிழக பாஜக மகளிர் அணி புகார்!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு நீதி கேட்டு ஆளுநரை சந்தித்து பாஜக மகளிர் அணியினர் கடிதம் அளித்தனர்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்தும், மாணவிக்கு நீதி கேட்டும் பாஜக மகளிரணி சார்பில் நேற்று முன்தினம் மதுரையில் பேரணி நடைபெற்றது. ஆனால் போலீசார் அனுமதி மறுத்து அனைவரையும் கைது செய்தனர்.
இந்நிலையில், திமுக பிரமுகரால் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் பாஜக மகளிர் அணியினர் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தனர்.
அப்போது பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு ஆளுநரிடம் அவர்கள் கடிதம் அளித்தனர். மேலும், எதிர்ப்பின் குரலை நசுக்குவதையும், ஆர்ப்பாட்டம் செய்வதற்கான ஜனநாயக உரிமையையும், கைது செய்வதையும் நோக்கமாகக் கொண்ட திமுக அரசின் செயல்பாடுகளையும் பாஜக மூத்த தலைவர்கள் வேதனையுடன் வெளிப்படுத்தினர்.