அதானி குழும விவகாரத்தில் மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு - பாஜக கண்டனம்!
அதானி குழும விவகாரத்தில் மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றம் சுமத்தியதற்கு பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கண்டனம் தெரிவித்துள்ளார்.
Advertisement
கடந்த 2021 முதல் 2023 வரை நான்கு மாநிலங்களில் சூரியசக்தி ஒப்பந்தத்தைப் பெற அதானி குழுமம் லஞ்சம் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, அதானி குழுமம் லஞ்சம் அளித்ததாக கூறப்படும் மாநிலங்களில் பாஜக ஆளும் மாநிலங்கள் ஏதும் இடம்பெறவில்லை என விளக்கமளித்துள்ளார். மத்திய அரசின் மீது ராகுல்காந்தி வேண்டுமென்றே பழி சுமத்துவது கடும் கண்டனத்திற்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அதானி குழுமம் லஞ்சம் அளித்ததாக கூறப்படும் காலத்தில் தமிழ்நாட்டில் திமுகவும், ஒடிசாவில் அப்போதைய நவீன் பட்நாயக் அரசும், சத்தீஸ்கரில் காங்கிரசும், ஆந்திராவில் முந்தைய ஜெகன்மோகன் ரெட்டி அரசும் ஆட்சியில் இருந்ததாக சம்பித் பத்ரா சுட்டிக்காட்டினார்.