செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அதிகரிக்கும் வருவாய் பற்றாக்குறை : திவாலாகும் தமிழகத்தின் நிதிநிலை - சிறப்பு தொகுப்பு!

09:00 PM Jan 24, 2025 IST | Sivasubramanian P

தமிழக அரசின் கடன் ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் விரைவில் பத்து லட்சம் கோடியை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள வருவாய் பற்றாக்குறை குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்தும் சற்று விரிவாக பார்க்கலாம்.

Advertisement

திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற 2021 -2022 ஆம் ஆண்டில் 4.86 லட்சம் கோடி ரூபாயாக இருந்த தமிழக அரசின் கடன் தொகை மார்ச் 2025க்குள் 8.33 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாயை கடனாக தமிழக அரசு வாங்கியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் தமிழகத்தின் கடன் அளவு விரைவிலேயே பத்து லட்சம் கோடியை தாண்டும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

தமிழக அரசின் மூலம் ஈட்டப்படும் வருவாயை விட செலவினங்கள் அதிகரித்துவருவதே கடன் அதிகரிப்பதற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 2010- 2011 ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 727 கோடி ரூபாயாக இருந்த வருவாய் பற்றாக்குறை அடுத்த மூன்று ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்து 2014 -2015 ஆம் ஆண்டில் 6 ஆயிரத்து 407 கோடியாக உயர்ந்திருக்கிறது.

2016-2017 ஆம் ஆண்டு வருவாய் பற்றாக்குறை இருமடங்கு அதிகரித்து 11 ஆயிரத்து 985 கோடியாக இருந்த நிலையில், அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தது.

2020-2021 ஆம் ஆண்டில் கொரனா பரவல் காரணமாக உலகப் பொருளாதாரமே பெரும் பாதிப்பைச் சந்தித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறையின் பன்மடங்கு அதிகரித்தது.

அதாவது இதுவரை அல்லாத அளவிற்கு 62 ஆயிரத்து 325 கோடி ரூபாயாக தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை உயர்ந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் கோவிட் தொற்று பரவல் குறையத் தொடங்கிய பின்னரும் தமிழக அரசின் வருவாய்ப்பற்றாக்குறையில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்படவில்லை.

2021-2022 ஆம் ஆண்டில் 46 ஆயிரத்து 538 கோடியாகவும், 2022-2023 ஆம் ஆண்டில் 36 ஆயிரத்து 215 கோடியாக குறைந்த வருவாய் பற்றாக்குறை, 2023-2024 ஆம் ஆண்டில் மீண்டும் 45 ஆயிரத்து 121 கோடியாகவும், 2024 – 2025 ஆம் ஆண்டில் 49 ஆயிரத்து 271 கோடியாகவும் அதிகரித்தது. வருவாய் பற்றாக்குறையை போக்கி கடன் சுமையை குறைப்போம் என வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த திமுக, தற்போது கடன் சுமையை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே செல்வதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தமிழக அரசின் கடந்த ஆண்டு மொத்த பட்ஜெட் தொகை 4 லட்சத்து 12 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த நிலையில் அதில் 49 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த வருவாய் பற்றாக்குறை அதிகரிப்புக்கு தமிழக அரசு சார்பாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

மேலும் தமிழக மின்வாரியத்தின் கடனை செலுத்துவதற்காகவும், போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள பணப் பலன்களை வழங்குவதற்காகவும், மானியம் வழங்குவதற்காகவும் அதிகளவிலான நிதி ஒதுக்கப்படுவது வருவாய் பற்றாக்குறை அதிகரிக்க ஒரு காரணமாக கூறப்படுகிறது.

மேலும் ஆண்டுதோறும் எதிர்பாராத வகையில் ஏற்படும் மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களுக்கும் அதிகளவிலான நிதியை ஒதுக்கி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டிய கட்டாயமும் மாநில அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் முந்தைய ஆண்டுகளில் பெறப்பட்ட பொதுக் கடனுக்காக செலுத்த வேண்டிய வட்டித் தொகையும் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2024 2025 ஆம் ஆண்டு 63 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிலையில், 2025 -2026 ஆம் ஆண்டில் அது 70 ஆயிரம் கோடி ரூபாயும், 2026-2027 ஆம் ஆண்டில் 76 ஆயிரம் கோடியாகவும் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசால் ஒதுக்கப்படும் மொத்த பட்ஜெட்டில் சுமார் 20 சதவிகிதம் நிதி வட்டி கட்டுவதற்காக மட்டுமே செலவிடப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

ஆனால், தமிழக அரசு வாங்கியிருக்கும் அனைத்து விதமான கடன்களும் மத்திய அரசின் 15வது நிதிக்குழு நிர்ணயிக்கும் அளவுக்குள்ளாகவே இருப்பதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

பத்தாண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த திமுக, தமிழக அரசின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டதோடு, நிதிநிலையை சீரமைக்க உலக அளவிலான பொருளாதார வல்லுநர்களை கொண்டு குழு அமைத்த நிலையில், தமிழக அரசின் வருவாயை பெருக்குவதற்கோ, பற்றாக்குறையை குறைப்பதற்கோ எந்த விதமான ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையே கடந்த கால செயல்பாடுகள் உணர்த்துகின்றன.

Advertisement
Tags :
FEATUREDMAINtamil nadu governmentDMK governmentrevenue deficitTamil Nadu government's debtncrease in expenditureCovid infection
Advertisement
Next Article