அதிகரித்து வரும் பிரபலங்களின் பிரிவு - சிறப்பு தொகுப்பு!
பிரபலங்களின் பிரிவு அதிகரித்து வரும் நிலையில் அதுகுறித்த தொகுப்பை பார்க்கலாம்.
கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். அப்படி இருக்கும் பொழுது ஒரு ரிலேசன்சிப் குள்ள போகும் போது இனிமேல் நீ தான் அப்படின்ற நினைப்புல ஒவ்வொரு காதலும் பிறக்குது அப்படி இருக்கும் பொழுது பிரிவு அப்படின்ற 3 எழுத்து ஒட்டுமொத்த ரிலேசன் சிப்பையும் உடைச்சிருது அதுவும் கல்யாணத்துக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக உருவாகுற பிரிவு தம்பதிகள தாண்டி சொந்தம் பந்தம்ன்னு கேக்குறவங்களுக்கு கூட ரொம்ப பெரிய கஷ்டத்த ஏற்படுத்துது.
அதுவும் பிரபலங்கள் பிரிவு அப்படின்றது ரசிகர்களுக்கு ரொம்ப பெரிய அதிர்ச்சி ஏற்படுத்துதுனே சொல்லலாம். ரிலேசன் சிப் பத்தி அறிவிக்குறப்ப ஆரம்பிக்கிறது அங்கயே பல ரசிகர்கள் பிரபலங்களோட ஜோடிக்கு பேன்ஸ் ஆகிறுராங்க. அப்படி இருக்குறப்ப டிவோர்ஸ் சொல்லும்போது ஒட்டுமொத்த ரசிகர்களுக்கு வருத்தம் ஆகிடுது. அப்படி எல்லாருக்கும் பிடிக்கப்பட்ட தமிழ்பிரபலங்கள் பிரிவ பத்தி பார்க்கலாம்.
பார்திபன் சீதா, ராமராஜன் நளினி இவங்க 90“ஸ் காலக்கட்டத்துல பிரிஞ்சாலும் இப்பவுமே அவரது ரசிகர்கள் இவங்களோட பிரிவ பத்தி கேட்காம இருக்கிறது இல்ல. அப்படி இருக்கையில கடந்த 4 வருஷத்துல மட்டும் ஏகப்பட்ட திரைப்பிரபலங்களோட பிரிவு நடந்துகிட்டு இருக்கு.
முதல் அதிர்ச்சின்னு சொன்னா அது தனுஷ் - ஐஷ்வர்யா. 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செஞ்ச தனுஷ் ஐஷ்வர்யா ஜோடி 2022ல கருத்து வேறுபாடு காரணமா பிரிஞ்சிட்டதா அறிவிச்சாங்க.
2018ல காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்ட சமந்தா நாகசைத்தான்யா 3 வருஷத்துல பிரிஞ்சிட்டாங்க. இன்ன வர அதுக்கான காரணம் தெரியல.
தன்னோட நீண்ட நாள் தோழியான ரஜினி விஷ்ணு விஷால் திருமணம் செஞ்ச 10 ஆண்டுகளுல இருவரும் பிரிஞ்சிட்டாங்க
தெய்வ தருமகளு இயக்குநர் ஏஎல்விஜய் நடிப்புல அமலாபால் நடிக்க அங்க ஆரம்பிச்ச காதல் 2014 திருமணம்ல முடிஞ்சது 2 ஆண்டுகலுல அதுக்கும் முற்றுப்புள்ளி.
ஜிவி சைந்தவி இவங்க இந்த பேர் யாருக்குதான் பிடிக்காது
இந்த இசையும் பாடலுக்கும் 11 ஆண்டுகால திருமண பயணம் கண் திருஷ்டி விழுந்த மாதிரி பட்டுப்போச்சு.
ரொம்ப கியூட் கப்பில்ஸ்சா இருந்துட்டு வந்த ஜெயம் ரவி ஆர்த்தியும் பிரிவு பத்தி எதுவுமே பேசாம பிரிஞ்சிட்டாங்க.
இப்ப ஏஆர் ரஹ்மான் இத யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டோம். தன்னோட மனைவி சாய்ராவ பிரிரதாவும் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததாவும் அறிவிச்சுகிட்டாங்க.பிரபலங்களோட பிரிவுன்னா அதுக்கு காரணம்மா சொல்றது ஈகோ.
மொத்தத்துல பொதுவா ஒரு ரிலேசன் சிப்புக்கு தேவ நம்ம கூட டைம் ஸ்பெண்ட் பன்னனும் விட்டு கொடுக்கிறது புரிஞ்சிக்கிறது இது சரியா இருந்தா மோஸ்ட்லி பிரிவு அப்படின்றது குறையும்