அதிகளவு சாராயம் குடித்தவர் மூச்சுத் திணறி பலி!
10:55 AM Dec 09, 2024 IST
|
Murugesan M
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அதிகளவு சாராயம் குடித்த நபர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.
Advertisement
சாரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான கலாநிதி என்பவர், புதுச்சேரியில் உள்ள சேதராப்பட்டுக்கு சென்று மது அருந்தியுள்ளார்.
பின்னர் அங்கிருந்து சாராயத்தை வாங்கி வந்து வீட்டிலும் அதிக அளவில் அருந்தியதாக கூறப்படுகிறது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதில் கலாநிதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
Advertisement
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒலக்கூர் போலீசார், கலாநிதியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement
Next Article