செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்ட சமூக ஆர்வலர் ஜெகபர் அலியின் உடல்!

03:14 PM Jan 31, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

புதுக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜெகபர் அலியின் உடல் எக்ஸ்ரே எடுக்கப்படுவதற்காக அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.

Advertisement

புதுக்கோட்டையில் நடைபெறும் கனிவள கொள்ளை குறித்து புகார் தெரிவித்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி, கடந்த 17ம் தேதி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார்.

ஜெகபர் அலியின் உடற்கூறாய்வு முறையாக நடைபெறவில்லை எனக்கூறி அவரது மனைவி சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

அதில், காவல்துறை முறையாக தடயங்களை சேகரிக்க தவறியதால் ஜெகபர் அலியின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், உடலை தோண்டி எடுத்து எக்ஸ்ரே செய்வது கூடுதல் ஆவணமாக அமையும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, ஜெகபர் அலியின் உடலை மீண்டும் தோண்டி எடுக்க அனுமதி வழங்கியது. இந்நடவடிக்கையை முழுவதுமாக வீடியோ பதிவு செய்து விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் ஆணையிட்டது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி ஜெகபர் அலி உடல் புதைக்கப்பட்ட பகுதிக்கு திருமயம் வட்டாட்சியர், சிபிசிஐடி ஆய்வாளர் உள்ளிட்டோர் வருகை தந்தனர். தொடர்ந்து ஜெகபர் அலியின் உடலை தோண்டி எடுத்து எக்ஸ்ரே செய்யும் பணியிலும் அவர்கள் ஈடுபட்டனர்.

Advertisement
Tags :
DMKMAINThe body of social activist Jagbar Ali was exhumed in the presence of the authorities!tn govt
Advertisement