For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

அதிகார துஷ்பிரயோகத்தின் மொத்த வடிவம் அறிவாலயம் : வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

05:50 PM Jan 02, 2025 IST | Murugesan M
அதிகார துஷ்பிரயோகத்தின் மொத்த வடிவம் அறிவாலயம்   வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

அதிகார துஷ்பிரயோகத்தின் மொத்த வடிவம் அறிவாலயம் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : "அண்ணா பல்கலைக் கழக மாணவிக்கு நடந்த வன்கொடுமைக்கு எதிரான நீதிப் போராட்டத்தில் ஈடுபட்ட பாமக சௌமியா அன்புமணியை கைது செய்த அறிவாலயம்  அரசின் அடக்குமுறையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

Advertisement

ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண் வன்கொடுமைகளைத் தடுக்க முடியாமல் உறைந்து முடங்கிக் கிடக்கும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கேட்டு போராடுபவர்களை புலிப் பாய்ச்சலில் கைது செய்து முடக்குவதைப் பார்த்தால், எங்கே தங்கள் வண்டவாளம் வெளியில் கசிந்துவிடுமோ என்று அறிவாலயம் அரசு உச்சகட்ட பதற்றத்தில் இருப்பதாகத் தெரிகிறது.

ஒரு பெண்ணுக்கு நடந்த அநீதிக்கு எதிராக ஒலிக்கும் தமிழகப் பெண்களின் உரிமைக் குரல்களை உங்கள் கொடுங்கோன்மையால் அடக்கிவிட முடியுமா தமிழக முதல்வரே?

Advertisement

அந்தக் கொடூரத்தில் தொடர்புடையவன் திமுக நிர்வாகி என்ற ஒரே காரணத்திற்காக அவனை உங்கள் துருப்பிடித்துப்போன இரும்புக்கரம் கொண்டு காக்க முயல்கிறீர்களா? அல்லது எங்கள் பெண் தலைவர்களின் அறப்போராட்டங்கள் தொடர்ந்தால் உங்கள் போலி முகத்திரைக் கிழித்தெறியப்பட்டு விடும் என்று அஞ்சுகிறீர்களா? என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement
Tags :
Advertisement